Homeசெய்திகள்க்ரைம்நகை கடைகளில் திருடிய நர்சிங் டிப்ளமோ படித்த பெண் கைது!

நகை கடைகளில் திருடிய நர்சிங் டிப்ளமோ படித்த பெண் கைது!

-

நரிசிங் டிப்ளமோ படித்த பெண் சம்பளம் குறைவாக இருப்பதால் நகைக்கடையில் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். பர்தா அணிந்து கொண்டு பத்துக்கும் மேற்பட்ட நகை கடைகளில் திருடி வந்தது கண்டுபிடிப்பு.

நகை கடைகளில் திருடிய நர்சிங் டிப்ளமோ படித்த பெண் கைது!

சென்னை புது வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலை  பகுதியில் சந்திப் (35) என்பவர் மதன் ஜுவல்லரி என்ற நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 18.ம் தேதி மதியம்  கடையில் இருந்த போது கம்மல் எடுக்க வேண்டும் என்று கூறி கருப்பு நிற பர்தா அணிந்த பெண் நகைகளை பார்த்து விட்டு பிறகு வருகிறேன் என்று வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டார்.

நகை கடைகளில் திருடிய நர்சிங் டிப்ளமோ படித்த பெண் கைது!

பிறகு,  10 கிராம் நகை கம்மல் எண்ணிக்கை குறைவதாக அறிந்த நகை கடைக்காரர் புது வண்ணாரப்பேட்டைகாவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்த உதவி ஆணையாளர் தனிப்பிரிவு படையினர் விசாரணை செய்தனர். இதே போல நகை கடையில் திருடும் பெண்களின் புகைப்படத்தை  ஒப்பிட்டு பார்த்து திருடியவரை உறுதி செய்தனர், கூடுவாஞ்சேரியில் இருந்த  பிரியங்கா (33) என்பது தெரிய வந்தது.

நகை கடைகளில் திருடிய நர்சிங் டிப்ளமோ படித்த பெண் கைது!

கூடுவாஞ்சேரி மூகாம்பிகை நகர் பகுதியில் பிரியங்காவை கைது செய்து விசாரித்ததில், தஞ்சாவூரில் நர்சிங் டிப்ளமோ படித்திருப்பதாகவும், சம்பளம் குறைவாக கிடைப்பதால் நகை கடைகளில் திருட்டில் ஈடுபட்டதாக தெரிவித்தார். இதே போன்று பாதிரிவேடு, தாம்பரம், கல்பாக்கம், அச்சரப்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதிகளிலும் நகை கடை திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளதை அடுத்து பிரியங்காவை கைது செய்து அவரிடமிருந்து நகைகளை புது வண்ணாரப்பேட்டை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

MUST READ