Homeசெய்திகள்க்ரைம்நெய்வேலி சாலை விபத்தில் இளைஞர் பலி - இது கொலை அல்ல போலீஸ் விளக்கம்

நெய்வேலி சாலை விபத்தில் இளைஞர் பலி – இது கொலை அல்ல போலீஸ் விளக்கம்

-

நெய்வேலி அருகே மதுகுடித்து வாகனம் ஓட்டியவர் மீது வழக்கு பதிவு செய்து அடித்துக் கொன்றதாக உறவினர் குற்றம் சாட்டிய நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்திருப்பதாக காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

நெய்வேலி சாலை விபத்தில் இளைஞர் பலி இது கொலை அல்ல போலீஸ் விளக்கம்

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள கீழக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்(35).இவர் புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்தார்.இவர் நேற்று நள்ளிரவு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக நெய்வேலி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இவரது இரண்டு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்தனர்.

இதனிடையே நேற்று அதிகாலை ராஜ்குமார் நெய்வேலி நகர காவல் நிலையம் எதிரே சாலையில் அடிபட்டு மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதனை அறிந்த அவருடைய உறவினர்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் காவல்துறையினர் தான் ராஜ்குமாரை அடித்து கொலை செய்ததாக கூறி நேற்று அதிகாலை முதல் பண்ருட்டி- கும்பகோணம் சாலையில் நெய்வேலி அருகே வடக்குத்து பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.இதன் காரணமாக அப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

நெய்வேலி சாலை விபத்தில் இளைஞர் பலி இது கொலை அல்ல போலீஸ் விளக்கம்

தொடர்ந்து போலீசாரின் 3 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின் இறந்தவரின்‌ உடல் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு சென்றனர். தொடர்ந்து இவ்வழக்கில் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டதில், ராஜ்குமார் சாலை விபத்தில் உயிரிழந்து இருப்பதாகவும், திண்டுக்கல் மாவட்டம் பெரியரெட்டியாபட்டி பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் உடன் பணி செய்யும் ஒருவரின் திருமணத்திற்காக வடலூர் வந்த பொழுது சாலையில் விபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் உறுதி செய்யப்பட்டு ஹரிஹரன் கைது செய்யப்பட்டார். மேலும் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும் காரில் ஒட்டியிருந்த முடி இறந்தவரின் உடல் பாகங்களின் தடயங்களை வைத்து கைது நடவடிக்கை மேற்கொண்டு 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

MUST READ