Homeசெய்திகள்மாவட்டம்சாத்தூர் வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்!

சாத்தூர் வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்!

-

- Advertisement -

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பட்டாச ஆலையில் வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு. மேலும் இந்த வெடி விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சாத்தூர் வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மடத்துப்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த “எக்ஸெஸ்” பட்டாசு ஆலையில் இன்று திடீரென தீப்பற்றி, அதனைத் தொடர்ந்து பலத்த வெடிவிபத்துகள் நிகழ்ந்தன.

we-r-hiring

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த தொழிலாளியின் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டது. மேலும், மூன்று தொழிலாளர்கள் கடுமையாக காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நேரத்தில் ஆலையில் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துச் சிதறியதால் நிலைமை மோசமடைந்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாமல் வெடிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயை கட்டுப்படுத்த கடுமையாக போராடினர். பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. தொடர்ந்து நான்கு முறைக்கு மேல் வெடிவிபத்துகள் ஏற்பட்டதால், அருகிலுள்ள கிராம மக்கள் பீதி அடைந்து வெளியேறினர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அம்பத்தூர் மை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து – 3.5 கோடி ரூபாய் சேதம்…

MUST READ