Homeசெய்திகள்மாவட்டம்சாத்தான்குளம் வழக்கு – பிற்பகல் 3.30 மணிக்கு தண்டனை அறிவிப்பு…

சாத்தான்குளம் வழக்கு – பிற்பகல் 3.30 மணிக்கு தண்டனை அறிவிப்பு…

-

- Advertisement -

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 காவலர்களுக்கான தண்டனை விவரங்களை இன்று பிற்பகல் 3.30 மணி அளவில்  வெளியாகியாக உள்ளது.சாத்தான்குளம் வழக்கு – பிற்பகல் 3.30 மணிக்கு தண்டனை அறிவிப்பு…

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் – பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020- ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.

we-r-hiring

இதனையடுத்து தந்தை – மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9பேரின் மீது சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2027பக்கம் குற்றப்பத்திரிகையும், இரண்டாம் கட்டதாக கூடுதலாக 400பக்கம் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் ஐந்தரை ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நடைபெற்றது.

நீதிபதி முத்துக்குமரன்  கடந்த மாதம் 23ந்தேதி குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என தீர்மானிப்பதாக தெரிவித்ததோடு குற்றம்சாட்டப்பட்ட 9 பேரின் உடல்நிலை, மன நிலை குறித்தான அறிக்கை மற்றும் சம்பள கணக்கு மற்றும் சொத்து விவரங்களையும் சிறைச்சாலையில் உள்ள நன்னடத்தை அதிகாரிகள் 9 பேரின் செயல்பாடுகள் குறித்தும் மத்திய அரசு மாநில அரசுகள் மூலமாக அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து கடந்த விசாரணையின் போது அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தண்டணை விபரங்களை 06.04.2026 அன்று அறிவிக்கப்படும் என தெரிவித்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது இன்று பிற்பகல் 3.30 மணியளவில் சாத்தாங்குளம் வழக்கில் தண்டனை விபரங்களை நீதிபதி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – 6 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு

MUST READ