திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் நாசர் பார்வையிட்டனர். கலைஞர் காப்பீடு திட்டம் சமுதாய வளைகாப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் நடைபெற்றது.தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.
அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் நடைபெற்று வரும் நலம் தாக்கும் ஸ்டாலின் திட்ட முகாமை திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் பார்வையிட்டனர்.
இந்த மருத்துவ முகாமில் இதயவியல், பொது மருத்துவம், சித்த மருத்துவம், இயன்முறை மருத்துவம், நரம்பியல் உள்ளிட்ட 17 துறை சார்ந்த மருத்துவர்கள் பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கின்றனர். மேலும் இங்கு எக்ஸ் ரே, ஸ்கேன் உள்ளிட்ட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
கூடுதலாக உணவு பாதுகாப்பு துறை, நல வாரியங்கள், கலைஞர் காப்பீடு கார்டு விண்ணப்பம் ஆகியவையும் தனி தனியாக ஸ்டால் அமைக்கப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து 50 கர்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்று சீர் வழங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறைந்தபட்ச அரசியல் பக்குவம் கூட வைகோவிற்கு இல்லை – மல்லை சத்யா