spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்மின்சார பேருந்து உற்பத்தியில் களம் இறங்கிய வின்ஃபாஸ்ட்… அடுத்த ஆண்டிற்க்குள் பேருந்துகளை தயாரிக்க திட்டம்..

மின்சார பேருந்து உற்பத்தியில் களம் இறங்கிய வின்ஃபாஸ்ட்… அடுத்த ஆண்டிற்க்குள் பேருந்துகளை தயாரிக்க திட்டம்..

-

- Advertisement -

மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் மின்சார பேருந்து உற்பத்தியில் களம் இறங்குகிறது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் தூத்துக்குடியில் உள்ள ஆலையில் மின்சார பேருந்துகளை தயாரிக்க உள்ளது.மின்சார பேருந்து உற்பத்தியில் களம் இறங்கிய வின்ஃபாஸ்ட்… அடுத்த ஆண்டிற்க்குள் பேருந்துகளை தயாரிக்க திட்டம்..தூத்துக்குடியில் ரூ.16,000 கோடியில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மின்சார கார் உற்பத்திதொழிற்சாலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இதுவரை தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் ஆலையில் மின்சார கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், மின்சார பேருந்து உற்பத்தியில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் களம் இறங்குகிறது.

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் தூத்துக்குடியில் உள்ள ஆலையில் மின்சார பேருந்துகளை தயாரிக்க உள்ளது. இந்த நிறுவனம், 6 முதல் 12 மீட்டர் நீளமுள்ள மின்சார பேருந்துகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. பேருந்துகளில் 281 kWh பேட்டரி திறன், ஒரே சார்ஜில் 260 கி.மீ. பயணிக்கும் திறன் ஆகிய வசதிகள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரிகள், தற்போது வியட்நாம் மற்றும் ஐரோப்பாவில் விற்பனையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் பாஜக… கண்களில் கருப்பு துணி கட்டி மாற்றுத்திறனாளிகள் நூதன ஆர்ப்பாட்டம்…

we-r-hiring

 

MUST READ