Homeசெய்திகள்இந்தியா“ஜெகன்மோகன் ரெட்டி அவ்ளோதான்” பிரசாந்த் கிஷேர் ஆருடம்..!!

“ஜெகன்மோகன் ரெட்டி அவ்ளோதான்” பிரசாந்த் கிஷேர் ஆருடம்..!!

-

 

prashanth kishore

ஆந்திரப் பிரதேசத்தில் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் அம்மாநில முதல்வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி படுதோல்வி அடைவார் என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மார்ச் 3ம் தேதி ‘டயலாக்ஸ்’ என்கிற தலைப்பில் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஊடகம் பிரசாந்த் கிஷோரை பேட்டி கண்டது. அப்போது தேசிய அரசியல் மற்றும் மாநில அரசியல் களம் குறித்து நிறைய விவாதிக்கப்பட்டன. நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் பல்வேறு கருத்துகளை பிரசாந்த் கிஷோர் பேசினார்.

ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலும் மக்களவைத் தேர்தலும் ஒரேநாளில் நடைபெறவுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆந்திராவில் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தவர் பிரசாந்த் கிஷோர். அவருடைய ஆலோசனை பேரில் செயல்பட்டு ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக அரியனை ஏறினார்.

jaganmohan reddy

அதனால் இம்முறை ஜெகன்மோகன் ரெட்டிக்கான வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கிறது? என்பது குறித்த கேள்வி பிரசாந்த் கிஷோர் முன்பு கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஜெகன்மோகன் ரெட்டிக்கு இம்முறை தேர்தல் முடிவுகள் எதுவும் கைக்கொடுக்காது. அவர் படுதோல்வி அடைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஜெகன்மோகன் ரெட்டி வலிமையாக இருக்கிறார் என்று சொல்லிவிட முடியாது. அவர் பல்வெறு காரணங்களால் தொடர் சரிவை சந்தித்து வருகிறார். அதனால் இம்முறை நடைபெறவிருக்கும் ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பெரியளவில் இழப்பை சந்திக்கவுள்ளார் என்று நான் யூகிக்கிறேன் என பிரசாந்த் கிஷோர் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் ஜெகன் மோகன் ரெட்டி இலவசங்களை மட்டுமே நம்பி அரசியல் செய்து வருகிறார். ஒரு மாநிலத்தில் தலைவராக இருந்துகொண்டு எல்லாவிதமான இலவசங்களையும் ஒரே மூட்டையில் வைத்துவிட முடியாது. அதை மக்களும் நன்கு உணர்ந்துள்ளதாகவே தெரிகிறது. அது இம்முறை நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

அவருடைய இந்த கருத்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், பிரசாந்த் கிஷோருடைய கணிப்புகள் மிகவும் தவறானவை. அவருடைய ஒவ்வொரு கணிப்பும் தவறாக வருவதை சமீப காலங்களில் பார்த்து வருகிறோம். அண்மையில் நடந்து முடிந்த ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ் கட்சி வெற்றி பெறும் என்று கூறியிருந்தார். ஆனால் அந்த கணிப்புகள் எல்லாம் பொய்த்துப் போனது.

பீகாரில் நேரடியான அரசியலில் களமிறங்கிய பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைந்தார். அவருடைய சீரற்ற மற்றும் தவறான கணிப்புகள் சார்ந்த பேச்செல்லாம் தனிப்பட்ட லாபத்துக்காக மட்டுமே. அவர் எதை அடிப்படையாக வைத்து இதையெல்லாம் சொல்கிறார் என்பது அவருக்கே தெரியும் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது.

MUST READ