இந்திய வாகனச் சந்தையில் ஒரு சகாப்தமாகத் திகழ்ந்த டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா (Toyota Innova Crysta), வரும் 2027-ஆம் ஆண்டுடன் தனது பயணத்தை முடித்துக் கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய சாலைகளின் “முடிசூடா மன்னன்” என்று அழைக்கப்படும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, வரும் மார்ச் 2027-ல் சந்தையிலிருந்து விடைபெற உள்ளது. சுமார் இரண்டு தசாப்தங்களாக இந்திய எம்பிவி (MPV) சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த மாடல், கடுமையான மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் காரணமாக நிறுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது.

ஏன் நிறுத்தப்படுகிறது?
இந்தியாவில் அமலுக்கு வரவுள்ள CAFE 3 (Corporate Average Fuel Economy) மாசுக்கட்டுப்பாட்டு விதிகள் மிகவும் கடுமையானவை. இதில் டீசல் இன்ஜின்கள் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பது சவாலானது.
டொயோட்டா நிறுவனம் தற்போது பெட்ரோல்-ஹைப்ரிட் (Hybrid) தொழில்நுட்பத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. ‘இன்னோவா ஹைகிராஸ்’ (Hycross) மாடல் ஏற்கனவே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதால், கிரிஸ்டாவிற்கு ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
2025-லேயே நிறுத்தப்பட வேண்டிய கிரிஸ்டா, வாடிக்கையாளர்களின் அதீத வரவேற்பு மற்றும் ஹைகிராஸ் மாடலுக்கான காத்திருப்பு காலம் காரணமாக 2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கிரிஸ்டாவின் தனிச்சிறப்புகள்:
பல லட்சம் கிலோமீட்டர்கள் ஓடினாலும் அசராத அதன் 2.4 லிட்டர் டீசல் இன்ஜின். இன்றும் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் கிரிஸ்டாவிற்குத் தனி மவுசு உண்டு. நீண்ட தூரப் பயணங்களுக்கு இந்தியாவின் முதல் தேர்வாக கிரிஸ்டாவே இருந்து வருகிறது.

டொயோட்டா நிறுவனம் 2027-ல் கிரிஸ்டாவை நிறுத்துவதற்கு முன்னதாக, அதன் ரசிகர்களுக்காக ஒரு ‘Farewell Edition’ அல்லது சிறப்புப் பதிப்பை அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கடந்த ஆண்டில் 166 புலிகள் உயிரிழப்பு!!- தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தகவல்



