Homeசெய்திகள்இந்தியாகர்நாடகாவில் காய்கறி ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து- 10 பேர் பலி!

கர்நாடகாவில் காய்கறி ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து- 10 பேர் பலி!

-

- Advertisement -

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் காய்கறி பாரம் ஏற்றிச்சென்ற லாரி விபத்தில் சிக்கியதில் 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சாவனூரை சேர்ந்த 25 நபர்கள்,  உத்தர கன்னட மாவட்டம் குமட்டாவில் நடைபெறும் சந்தைக்கு காய்கறிகளை ஏற்றிக்கொண்டு லாரியில் சென்று கொண்டிருந்தனர். இன்று அதிகாலை உத்தரக்கன்னட மாவட்டம் யல்லாப்புரா தாலுகாவிற்கு உட்பட்ட குல்லாப்புரா கட்டே என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலை 66ல் லாரி  சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது விபத்திற்கு உள்ளானது.

இதில் லாரியில் பயணம் செய்த 10 பேர் பரிதாபமாக உரிழந்தனர். மேலும் 15 பேர் பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

MUST READ