
‘மன் கி பாத்’ என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் இன்று (ஜூன் 18) காலை 11.00 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “பருவமழைத் தொடங்கியுள்ள நிலையில் ஒவ்வொரு துளி மழை நீரையும் சேகரிக்க வேண்டும். இயற்கைப் பேரிடர்களைத் தடுத்து நிறுத்த முடியாது; ஆனால் அதில் இருந்து விரைவாக மீள முடியும். பிபர்ஜாய் புயலால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டம் விரைவில் மீண்டெழும்.

பார்சல் உணவில் பிளேடு துண்டு….உணவகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது உணவுப் பாதுகாப்புத் துறை!
பேரிடர் மேலாண்மைப் பணிகளில் இந்தியாவின் செயல்பாடுகள் பிற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. சத்ரபதி சிவாஜி பல ஆண்டுகளுக்கு முன்புக் கட்டிய கோட்டைகள் இன்று (ஜூன் 18) வரை கம்பீரமாக நிற்கின்றன. 2025- ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க தீவிரமாகப் பணிகள் நடைபெற்று வருகிறது. விளையாட்டுத் துறையில் இந்தியா மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
பாஜகவுக்கு சமாதி கட்ட அண்ணாமலை ஒருவர் போதும் – நாராயணசாமி பேட்டி
ஜனநாயகத்திற்கு எதிரான அவசர நிலை வரும் ஜூன் 25- ஆம் தேதியில் தான் அமல்படுத்தப்பட்டது. வீட்டுப்பாடங்களை மாணவர்கள் முன்னதாகப் படிக்க வேண்டும். அடுத்த வாரம் நான் அமெரிக்கா செல்வதால் இம்முறை ‘மன் கி பாத்’ ஒருவாரம் முன்னதாகவே நடக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.