
மதுரையில் உணவகத்தில் வாடிக்கையாளர் வாங்கிய பார்சல் உணவில் பிளேடு துண்டுக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியின் உதவியாளர் கைது!
மதுரை மாவட்டம், சோழை அழகுபுரத்தைச் சேர்ந்த முகமதுவின் மனைவி ஜெய்ஹிந்த் புறத்தில் உள்ள உணவகத்தில் பார்சலில் சாதம் வாங்கியுள்ளார். பின்னர், தனது வீட்டிற்கு சென்று பார்சலைப் பிரித்துப் பார்த்த போது, உணவில் உடைந்த பிளேடு துண்டுக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறையிடம் முகமது அளித்த புகாரின் அடிப்படையில், அதிகாரிகள் உணவகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி மீது முரசொலி விமர்சனம்!
வேறொரு உணவகத்தில் இருந்து வாங்கப்பட்ட உணவை முகமதுவின் மனைவியிடம் வழங்கியது விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, உரிய வழக்கம் கேட்டு உணவகத்திற்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.