
தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் சிலந்தி என்ற தலைப்பின் கீழ் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. அதில், தி.மு.க. இயக்கம் தன் உணர்வுகளை ஊட்டி வளர்த்த இயக்கம் என்றும், சுயமரியாதை என்னும் அடித்தளத்தில், கட்டி எழுப்பப்பட்ட கொள்கைக் கோட்டம் இது என்றும், பதவிகளை எதிர்நோக்கி எழுந்த இயக்கம் அல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“அனைத்து மதுக் கடைகளையும் மூட வேண்டும்!”- தமிழக அரசுக்கு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
சிலருக்கு எதையாவது குத்திக் குதறிக் கொண்டு இருப்பதில் ஆனந்தம் ஏற்படும் என்றும், அந்த சாடிஸ செயல்களில் தமிழக ஆளுநர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களை ஆளுநர் பதவி நீக்கம் செய்யும் எந்தவொரு ஏற்பாடும் அரசியல் சாசனத்தில் இல்லை என்று குறிப்பிட்டுள்ள முரசொலி, கேரளாவில் இதை நிரூபணமாக்கும் சம்பவங்களும் அரங்கேறியுள்ள தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியின் உதவியாளர் கைது!
கேரளாவில் அமைச்சரவை விளக்க வேண்டும் என முதலமைச்சருக்குக் கடிதம் எழுதிவிட்டு பலமுறை தாக்குதலுக்கு உள்ளான கேரள ஆளுநர் ஆர்.எஸ்.கான், டெல்லி சென்று திரும்பிய பின் முதலமைச்சரின் முடிவை ஏற்பதாக தெரிவித்த நிகழ்வுகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யக் கோரி கடிதம் எழுதிய ஆளுநர், தனது அதிகார வரம்பை உணராமல் செயல்பட்டு வருவதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.