2,000 ரூபாய் நோட்டுகளில் இதுவரை 97.26% திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
கடந்த மே மாதம் 19- ஆம் தேதி முதல் 2,000 ரூபாய் நோட்டுகளை தனிநபர் முதல் நிறுவனங்கள் வரை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. செப்டம்பர் 30- ஆம் தேதிக்கு முன்னதாக 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும், அறிவிக்கப்பட்டது. பிறகு வங்கிகளில் மாற்றக் கூடிய, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்திய அணி!
இந்த நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, மே 19- ஆம் தேதி 2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த புழக்கம் 3.56 லட்சம் கோடியாக இருந்ததாகவும், நவம்பர் 30- ஆம் தேதி நிலவரப்படி, 9,860 கோடி ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.