Homeசெய்திகள்இந்தியாமூன்று மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி முகம்!

மூன்று மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி முகம்!

-

 

bjp

நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பா.ஜக. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் ஆளும் பி.ஆர்.எஸ். கட்சியைப் பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டு முறை முதலமைச்சராக இருந்த சந்திரசேகர ராவ், முதல்முறையாக ஆட்சியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மிக்ஜம் புயல்: துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..

மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 160 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 60 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 199 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடந்த தேர்தலில் பா.ஜ.க. 100- க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது.

புயலுக்கு பிறகு செய்ய வேண்டியவை! செய்யக் கூடாதவை!

இதனிடையே, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் முதலமைச்சர் யார் என்பதை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் தேர்வு செய்வார்கள் என பா.ஜ.க. தலைமை அறிவித்துள்ளது.

MUST READ