Homeசெய்திகள்தமிழ்நாடுபுயலுக்கு பிறகு செய்ய வேண்டியவை! செய்யக் கூடாதவை!

புயலுக்கு பிறகு செய்ய வேண்டியவை! செய்யக் கூடாதவை!

-

 

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜாம்’ புயல் நாளை மறுநாள் (டிச.05) தீவிரமடைந்து தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கவுள்ளது. சென்னையில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்கு திசையில் மிக்ஜாம் புயல் நிலைக் கொண்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. புயலால், பாதிப்பு ஏற்படும் என கண்டறியப்பட்ட இடங்களில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் ஆட்சியமைக்கிறது பா.ஜ.க.?

புயல் தொடர்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு காவல்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, புயலுக்கு பிறகு செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை என்னென்ன? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!

வீட்டுக்குள் மின்சாரம் எரிவாயுவை அணைக்க வேண்டும். கதவுகள், ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும். பழுதடைந்த வீடாக இருந்தால், பாதுகாப்பான இடத்திற்கு செல்லுங்கள். கொதிக்க வைத்த/ குளோரின் கலந்த குடிநீரைப் பருகுங்கள். அதிகாரப்பூர்வமான செய்திகளை மட்டும் நம்புங்கள்.

தெலங்கானா, சத்தீஸ்கரில் ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ்?

சேதமடைந்த கட்டிடத்தின் அருகில் செல்லாதீர்கள்; உடைந்த மின் கம்பங்கள்/ அறுந்து விழுந்த மின் கம்பிகள் அருகில் செல்லாதீர்கள். முதியவர்கள், சிறுவர்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பாதீர்கள் என பொதுமக்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது.

MUST READ