Homeசெய்திகள்இந்தியாசெப்.15- ஆம் தேதிக்குள் 5 மாநில தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என தகவல்!

செப்.15- ஆம் தேதிக்குள் 5 மாநில தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என தகவல்!

-

 

வரும் செப்டம்பர் 15- ஆம் தேதிக்குள் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

“சென்னை, நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்”- தமிழக அரசு உத்தரவு!

மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள், இந்தாண்டு இறுதிக்குள் நடத்தப்பட வேண்டும். இதற்கான ஆயத்தப் பணிகளை இந்திய தலைமை ஆணையம் மேற்கொண்டு வந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தலை அமல்படுத்துவதற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

இந்த சூழலில் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படாது எனவும், வரும் செப்டம்பர் 15- ஆம் தேதிக்குள் இந்திய தலைமை தேர்தல் ஆணையம், ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

“கருத்துக் கூற அமைச்சர் உதயநிதிக்கு உரிமை உண்டு”- கமல்ஹாசன்!

ஏற்கனவே, இந்திய தலைமை தேர்தல் ஆணையர், சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு நேரில் சென்று தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வுச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ