
கேரளாவில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிக் கொலை செய்த கொடூர நபருக்கு போக்ஸோ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மழலைச் செல்வங்கள் – தலைவர்கள் வாழ்த்து..
கேரளா மாநிலம், ஆலுவா பகுதியில் ஒரு வீட்டில் இருந்த 5 வயது பெண் குழந்தையை அசபக் அலம் (Asafak Alam) என்ற வடமாநில புலம் பெயர்ந்த தொழிலாளி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
கடந்த ஜூலை 28- ஆம் தேதி இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொல்லப்பட்ட சிறுமியும், வடமாநில தொழிலாளர் ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். சிசிடிவி காட்சிகளை ஆய்வுச் செய்ததில் குற்றவாளி அசபக் அலம் பிடிப்பட்ட நிலையில், அது குறித்த வழக்கை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.
குற்றவாளிக்கு மரணத் தண்டனையை அதிகபட்ச தண்டனையாக வழங்குவதாக எர்ணாகுளம் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி சோமன் தெரிவித்துள்ளார். குழந்தைகள் தினமான இன்று (நவ.14) இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை தொடரும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க வழிவகுக்கும், போக்ஸோ சட்டம் அமலுக்கு வந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.