Homeசெய்திகள்இந்தியாதிருப்பதி ஏழுமலையான் கோயில் வரலாற்றில் ஒரே நாளில் ரூ.7.68 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயில் வரலாற்றில் ஒரே நாளில் ரூ.7.68 கோடி காணிக்கை

-

- Advertisement -

திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் தேவஸ்தான வரலாற்றில் முதல் முறையாக வைகுண்ட ஏகாதசி ஒட்டி சாமி தரிசனம் செய்த பக்தர்கள் ஒரே நாளில் 7.68 கோடி உண்டியலில் காணிக்கை செலுத்தினர்.

we-r-hiring

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் 69 ஆயிரத்து 414 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் செலுத்திய காணிக்கை தேவஸ்தான வரலாற்றில் முதல்முறையாக 7.68 கோடி ரூபாய் காணிக்கை செலுத்தி இருந்தனர். 18 ஆயிரத்து 612 பக்தர்கள் மொட்டை அடித்து தலை முடி காணிக்கை செலுத்தி இருந்தனர். இதற்கு முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23 ம் தேதி ஒரே நாளில் ₹ 6.31 கோடி காணிக்கை செலுத்தி இருந்தனர். அதற்கு முன்பு 2012 ஆண்டு ஏப்ரல் 1 ம் தேதி ரூ 5.73 கோடி பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியது தேவஸ்தான வரலாற்றில் ஒரே நாளில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை என இருந்தது.

வைகுண்ட துவாதசியை ஒட்டி ஏழுமலையான் கோயிலில் இருந்து அதிகாலை சக்கரத்தாழ்வார் பள்ளத்தில் நான்கு மாத வீதிகள் வழியாக ஊர்வலமாக வராக சுவாமி சொன்னதுக்கு கொண்டுவரப்பட்டது பின்னர் ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு பால் தேன் தயிர் கொண்டு திருமஞ்சனமும் அதனை அடுத்து சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர்.

வைகுண்ட ஏகாதசி ஒட்டி அத்தியாயன உற்சவம் கடந்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் பகல்பத்து வைகுண்ட ஏகாதசிக்கு முன்பு 11 நாட்கள் ஜீயர்கள் தலைமையில் கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் 12 ஆழ்வார்கள் எழுதிய நான்காயிரம் திவ்ய பிரபந்தத்தில் இருந்து 3000 பாசுரங்களை நேற்று முன்தினம் வரை பாடப்பட்டு பகல் பத்து உற்சவம் நிறைவடைந்தது. நேற்று முதல் ராபத்து உற்சவம் தொடங்கியது. இதில் நம்மாழ்வார் எழுதிய ஆயிரம் பாசுரங்களில் இருந்து தினந்தோறும் 100 பாசுரங்கள் என பத்து பாசுரங்கள் 10 நாட்களுக்கு ஜீயர்கள் தலைமையில் பாட உள்ளனர். வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனத்திற்கான 2 லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் இருந்தும் பக்தர்கள் வருகை குறைவாக உள்ளதால் டிக்கெட் கவுண்டர் முன்பு காலியாக உள்ளது.

tirupati

வைகுண்ட ஏகாதசி ஒட்டி சொர்க்கவாசல் நேற்று திறக்கப்பட்டு 11ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வழக்கமாக வைகுண்ட ஏகாதிசியை ஒட்டி சுவாமி தரிசனம் செய்வதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். இதனால் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். குளிர் மழை வெயில் இருந்தாலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதால் ஆன்லைனில் ரூபாய் 300 சிறப்பு நுழைவு தரிசனத்தின் 2 லட்சம் டிக்கெட்டுகள் தேவஸ்தானம் ஏற்கனவே வெளியிடப்பட்டு பக்தர்கள் முன்பதிவு செய்து கொண்டனர். இலவச டோக்கன்கள் அனைத்தும் ஒரு நாளைக்கு 45 ஆயிரம் டோக்கன்கள் என 10 நாட்களுக்கு உண்டான 4.50 லட்சம் டோக்கன்களை திருப்பதியில் 9 பகுதிகளில் 96 கவுண்டர்கள் மூலம் வழங்க தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த டோக்கன்களை தொடர்ந்து பத்து நாட்களுக்கு வழங்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்து கடந்த ஜனவரி 1ஆம் தேதி அதிகாலை முதல் வழங்கி வருகின்றனர்.

டோக்கன்கள் வழங்க தொடங்கிய முதல் நாளில் பக்தர்கள் ஆர்வமுடன் பெற்று சென்றனர். இதில் நேற்று வரை ஐந்தாம் தேதி வரையிலான டோக்கன்கள் மட்டுமே பக்தர்கள் பெற்று சென்றனர். மீதமுள்ள 6ம் தேதி முதல் 11ஆம் தேதி வரையிலான இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட இலவச டோக்கன்கள் அப்படியே உள்ளது. பக்தர்கள் வருகைக்காக டோக்கன் கவுண்டர்கள் 24 மணி நேரமும் திறக்கப்பட்டு உள்ளது. எனவே பக்தர்கள் நேரடியாக திருப்பதிக்கு வந்து இலவச டோக்கன்கள் பெற்றுக் கொண்டு 6 ம் தேதி முதல் 11-ம் தேதி வரை எந்த தேதியில் வேண்டுமோ அந்த தேதிக்கு டோக்கன் பெற்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதியில் அந்த நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்ய சென்று சொர்க்கவாசல் வழியாக சுவாமி தரிசனம் செய்யலாம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

MUST READ