Homeசெய்திகள்இந்தியா22 மாநிலங்களுக்கு ரூபாய் 7,532 கோடி பேரிடர் நிவாரண நிதி!

22 மாநிலங்களுக்கு ரூபாய் 7,532 கோடி பேரிடர் நிவாரண நிதி!

-

 

22 மாநிலங்களுக்கு ரூபாய் 7,532 கோடி பேரிடர் நிவாரண நிதி!
File Photo

22 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூபாய் 7,532 கோடியை விடுத்தது மத்திய அரசு.

“தோனி கையெழுத்து போட்ட பேட் கிடைக்கும்னு சொன்னாங்க, உடனே ஓகே சொல்லிட்டேன்”… கலகலப்பாக பேசிய யோகிபாபு!

அதன்படி, தமிழகத்திற்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூபாய் 450 கோடியை மத்திய நிதியமைச்சகம் விடுத்துள்ளது. அதிகபட்சமாக, மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ரூபாய் 1,420 கோடியும், அடுத்தப்படியாக உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு ரூபாய் 812 கோடியும் விடுத்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி வழக்கில் காவல்துறை மன்னிப்பு கோரியது!

அதேபோல், கர்நாடகா மாநிலத்திற்கு ரூபாய் 348.80 கோடியும், கேரளாவிற்கு ரூபாய் 138.80 கோடியும், தெலுங்கானா மாநிலத்திற்கு ரூபாய் 188.80 கோடியும், திரிபுரா மாநிலத்திற்கு 30.40 கோடியும், உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூபாய் 413.20 கோடியும், ஒடிஷா மாநிலத்திற்கு ரூபாய் 707.60 கோடியும், பஞ்சாப் மாநிலத்திற்கு ரூபாய் 218.40 கோடியும், மிசோரம் மாநிலத்திற்கு ரூபாய் 20.80 கோடியும், ஆந்திர பிரதேசம் மாநிலத்திற்கு ரூபாய் 493.60 கோடியும், அருணாச்சல் பிரதேசம் மாநிலத்திற்கு ரூபாய் 110.40 கோடியும், அசாம் மாநிலத்திற்கு ரூபாய் 340.40 கோடியும், பீகார் மாநிலத்திற்கு ரூபாய் 624.40 கோடியும், சத்தீஸ்கர் மாநிலத்திற்கு 181.60 கோடியும், கோவா மாநிலத்திற்கு ரூபாய் 4.8 கோடியும், குஜராத் மாநிலத்திற்கு ரூபாய் 584 கோடியும், ஹரியானா மாநிலத்திற்கு ரூபாய் 216.80 கோடியும், ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்திற்கு ரூபாய் 180.40 கோடியும் மத்திய நிதியமைச்சகம் விடுத்துள்ளது.

MUST READ