Homeசெய்திகள்தமிழ்நாடுஎடப்பாடி பழனிசாமி வழக்கில் காவல்துறை மன்னிப்பு கோரியது!

எடப்பாடி பழனிசாமி வழக்கில் காவல்துறை மன்னிப்பு கோரியது!

-

 

"பட்டாசு ஆலைகளை அரசு கண்காணிக்க வேண்டும்"- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
File Photo

எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

“தோனி கையெழுத்து போட்ட பேட் கிடைக்கும்னு சொன்னாங்க, உடனே ஓகே சொல்லிட்டேன்”… கலகலப்பாக பேசிய யோகிபாபு!

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தேர்தல் குற்றச்சாட்டுகள் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறி விசாரணை நடத்தியதால் காவல்துறை அதிகாரிகள் மீது எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று (ஜூலை 12) விசாரணைக்கு வந்த போது, உயர்நீதிமன்றத்தில் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினர். இதையடுத்து நீதிபதி, இறுதி முடிவெடுக்கும் வரை விசாரணையைப் பெரிதுபடுத்த வேண்டாம் என சேலம் காவல்துறையினருக்கு அறிவுறுத்தி, எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

“தமிழ்நாடு என்னைத் தத்தெடுத்துள்ளது”… மனம் நெகிழ்வாக பேசிய தோணி!

மேலும், தேர்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் விசாரணை நடத்த சேலம் காவல்துறைக்கு உயர்நீதிமன்ற நீதிபதி தடை விதித்துள்ளார்.

MUST READ