spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதொண்டையில் சாக்லேட் சிக்கி 4 வயது சிறுவன் பலி... கான்பூரில் அதிர்ச்சி சம்பவம்!

தொண்டையில் சாக்லேட் சிக்கி 4 வயது சிறுவன் பலி… கான்பூரில் அதிர்ச்சி சம்பவம்!

-

- Advertisement -

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தொண்டையில் சாக்லேட் சிக்கி 4 வயது
சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 3ஆம் தேதியன்று ஃப்ரூட்டோலா என்ற சாக்லேட்டை 4 வயது சிறுவன் சாப்பிட்டுள்ளார். அப்போது, அளவில் பெரிதாக இருந்த சாக்லேட் சிறுவனின் தொண்டையில் சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் சிறுவன் அவதிப்படவே அவரது தாய் பதற்றத்தில் சிறுவனுக்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்துள்ளார். இதனால் அந்த சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

we-r-hiring

இதனை அடுத்து, உறவினர்கள் சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அந்த சிறுவனை அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்களால் சிறுவனின் தொண்டையில் சிக்கிய சாக்லேட்டை அகற்ற முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுவனை வேறு சில மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் தீபாவளியை பண்டிகைக்காக மருத்துவர்கள் விடுப்பில் சென்றதால் சிறுவனுக்கு உரிய சிகிச்சை கிடைக்கவில்லை. இதனால் சுமார் 3 மணி நேரமாக போராடிய சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த சம்பவம் குறித்து, பாரா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து,
சிறுவனுக்கு சாக்லேட் விற்பனை செய்த கடைக்காரரை தீவிரமாக தேடி வருகின்றனர். அதேவேளையில் சிறுவன் மரணத்துக்கு காரணமான சாக்லேட் தயாரிப்பு நிறுவனம் மீது நடவடிக்கை வேண்டும் என அவரது குடும்பத்தினர்
கோரிக்கைவிடுத்துள்ளனர்.

MUST READ