- Advertisement -
வீட்டின் முன் திடீரென வெடித்த நாட்டு வெடிகுண்டு- கணவன், மனைவி கவலைக்கிடம்
சித்தூர் மாவட்டம் குப்பத்தில் வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் கணவன், மனைவி படுகாயமடைந்தனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் நகரில் உள்ள பெத்தப்பள்ளி கங்கமாம்பா கோயில் தெருவில் உள்ள வீட்டின் வாசலில் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில் வீட்டில் இருந்த முருகேஷ், தனலட்சுமி தம்பதி படுகாயமடைந்தனர். மர்ம நபர்கள் அவர்களின் வீட்டு வாசலில் வெடிவைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
வெடிவிபத்தில் வீடுகள் இடிந்தாலும், இருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்களை மீட்டு குப்பம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களது வீட்டின் முன்பு எதற்காக குண்டுவெடிப்பு ஏற்பட்டது என்பது குறித்து குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.