ஆந்திராவில் பிரபல ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து. பற்றி எரியும் ஷாப்பிங் மால் கரும்புகை சூழ்ந்த நிலையில் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் நகரில் உள்ள சவுத் இந்தியா ஷாப்பிங் மால் உள்ளது. இங்கு திடீரென்று தீ பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தின் போது காலை நேரம் என்பதால் அங்கு பெருமளவில் வாடிக்கையாளர்கள் இல்லை. ஆனால் ஊழியர்கள் மட்டுமே பணியில் இருந்தனர். ஷாப்பிங் மாலின் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ வேகமாக பரவத் துவங்கிய உடன் பணியில் இருந்த ஊழியர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஷாப்பிங் மால் கட்டிடத்தில் வெண்டிலேஷன் வசதி இல்லாத காரணத்தால் அந்த கட்டிடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது.எனவே ஷாப்பிங் மால் உள்ளே சென்று தீயணைப்பு பணியில் ஈடுபடுவதில் தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சவாலாக மாறி உள்ளது.
எனவே கட்டிடத்தின் ஒரு சுவரை உடைத்து உள்ளே சென்று தீயணைப்பு பணியை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட ஷாப்பிங் மாலில் இருந்து தொடர்ந்து கரும்புகள் வெளியேறுவதால் அந்த பகுதி மக்களுக்கு சுவாச இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.
தீ விபத்தில் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு வகையான பொருட்கள் எரிந்து சேதம் ஆகியது. தீயை முற்றிலும் கட்டுப்படுத்தி அனைத்தே பிறகே எவ்வளவு சேதம் என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.