- Advertisement -
இஸ்ரேல் நிறுவனம் – அதானி குழுமம் இடையே செமிகண்டக்டர் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது.கடந்த செப்டம்பர் மாதம் 10 பில்லியன் டாலரில் மராட்டியத்தில் செமிகண்டக்டர் உற்பத்தி மையம் அமைக்க ஒப்பதல் அளிக்கப்பட்டு, மாதம் 80,000 செமிகண்டக்டர்களை இஸ்ரேல் நிறுவனம் – அதானி குழுமமும் கூட்டாக தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. உள்நாட்டில் வணிகரீதியாக செமிகண்டக்டர் தேவை எவ்வளவு என்பதில் நிச்சயமற்ற சூழல் நிலவுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த நிலையில், இஸ்ரேல் நிறுவனத்துடன் அதானி குழுமம் தற்காலிகமாக பேச்சுவார்த்தையை நிறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.