spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாசூரியனின் தோற்றத்தை அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம்

சூரியனின் தோற்றத்தை அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம்

-

- Advertisement -

சூரியனின் சமீபத்திய தோற்றத்தை இந்தியாவின் ஆதித்யா எல்-1 படம் பிடித்து இஸ்ரோவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

சூரியனின் தோற்றத்தை அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம்

we-r-hiring

 

சூரியனை ஆய்வு செய்ய, கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை, இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.

127 நாள் பயணத்திற்கு பிறகு கடந்த வருடம் 2023 செப்டம்பர் மாதம் சூரிய வட்ட பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது. பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் ஆதித்யா பயணித்து கொண்டிருந்த நிலையில் கடந்த மே மாதம் ஆதித்யா எல்-1 சில புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சூரியனின் தோற்றத்தை அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம்

சீற்றத்துடன் கூடிய சூரியன் படங்கள் குறித்து இஸ்ரோ அதிகாரிகள் கூறுகையில், ஆதித்யா எல்-1 ல் மிகவும் சக்தி வாய்ந்த எஸ்.யூ.ஐ.டி. தொலை நோக்கி சூரியனின் அல்ட்ரா வயலட் புகைப்படத்தை எடுத்துள்ளது. எக்ஸ் மற்றும் எம் கதிர்கள் உள்ளிட்ட பல்வேறு கதிர்கள் குறித்த விபரங்களும் நமக்கு கிடைத்துள்ளன.

குடும்பத்துடன் சுற்றுலா சென்ற நடிகர் கார்த்தி… புகைப்படங்கள் வைரல்… (apcnewstamil.com)

மே மாதம் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பூமியில் காந்த கதிர் வீச்சு ஏற்பட்டதையும் மே 11ல் அனுப்பிய புகைப்படத்தில் தெளிவாக பதிவாகியுள்ளது என்றனர். அது மட்டும் இன்றி ஆதித்யா எல்-1 எடுத்த புகைப்படங்கள் மற்றும் அதன் விபரங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

MUST READ