Homeசெய்திகள்இந்தியாஆதித்யா எல்1 விண்கலம் செப்.2- ஆம் தேதி ஏவப்படுகிறது?

ஆதித்யா எல்1 விண்கலம் செப்.2- ஆம் தேதி ஏவப்படுகிறது?

-

- Advertisement -

 

ஆதித்யா எல்1 விண்கலம் செப்.2- ஆம் தேதி ஏவப்படுகிறது?
Photo: ISRO

சந்திரயான்- 3 திட்டம் வெற்றியைத் தொடர்ந்து, சூரியனை ஆய்வுச் செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம் வரும் செப்டம்பர் 02- ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

யோகி பாபுவின் ‘லக்கி மேன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்தவாறு, சூரியனின் ஒளிவட்டம், சூரிய புயல்கள் உள்ளிட்டவைகளை குறித்து ஆதித்ய எல்1 விண்கலம் ஆய்வுச் செய்யவுள்ளது. இஸ்ரோ முதன்முறையாக சூரியனை ஆய்வுச் செய்யவுள்ளது என்பதும், ஆதித்யா விண்கலம் இந்திய விஞ்ஞானிகளின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சந்திரயான்- 3 திட்டம் வெற்றியைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் 2- ஆம் தேதி (அல்லது) செப்டம்பர் 04- ஆம் தேதி அன்று ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஆதித்யா எல்1 விண்கலத்தை விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி கூட்டணியின் ‘ஜவான்’…… இசை வெளியீட்டு விழா அப்டேட்!

ஆதித்யா எல்1 விண்கலம், விண்ணில் ஏவுவதற்கு தயாராக உள்ளதாக இஸ்ரோ ஏற்கனவே அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ