Homeசெய்திகள்இந்தியாஆந்திராவில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 30 பேர் கைது!

ஆந்திராவில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 30 பேர் கைது!

-

- Advertisement -

 

ஆந்திராவில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 30 பேர் கைது!
Photo: Video Crop Image

ஆந்திராவில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏ.வி.என்.எல்-எஸ்.ஐ.டி.எம் உள்நாட்டுமயமாக்கல் மாநாடு – “பாதுகாப்புக்கான மேக் இன் இந்தியா”

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் சந்தனபாடி என்ற இடத்தில் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவுக் காவல்துறையினர், வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, இரண்டு வாகனங்களில் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளைக் கடத்தி வந்த 31 பேர் கைது செய்ததுடன், இரண்டு லாரிகளையும், செம்மரக் கட்டைகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 30,000 ரூபாய் ரொக்கம், கோடாரிகள், 30 செல்போன்கள் ஆகியவற்றையும் கைப்பற்றினர். கைது செய்யப்பட்டவர்களில் 30 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களை தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவர் அழைத்துச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

“சாதி, மதம் பற்றி பேசி ஏன் வாக்கு சேகரிக்கிறார்கள்?”- பிரியங்கா காந்தி கேள்வி!

கைது செய்யப்பட்ட ஆந்திராவைச் சேர்ந்த ராமநாத ரெட்டி என்பவர் மீது செம்மரக்கடத்தல் தொடர்பாக, 60- க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும், அவரை பல ஆண்டுகளாக காவல்துறையினர் தேடி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

MUST READ