பள்ளியில் இரு ஆசியர்கள் மோதிக்கொண்ட நிலையில் சண்டையை தடுத்து நிறுத்த வந்த 10 வயது மாணவனை ஆசிரியர் முதல் மாடியில் இருந்து தூக்கி வீசிய நிலையில் படுகாயம் அடைந்த மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு.

கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் நரகுண்ட் தாலுக்கா உள்ள ஹாட்லி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார பள்ளியில் தற்காலிக ஆசியர்களாக முத்தப்பா மற்றும் கீதா ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையில் அவ்வப்போது சண்டை ஏற்படுவது வழக்கமாக இருந்து என சக ஆசிரியர்கள் தெரிவித்தனர். 20.12.2022 அன்று காலை பள்ளி தொடங்கிய நிலையில் இருவரும் பள்ளி முதல் மாடியில் வழக்கம் போல சண்டையிட்டுள்ளனர். சண்டையில் கொபம் அதிகரிக்க முத்தப்பா, கீதாவை அங்கு இருந்த மண்வெட்டியை கொண்டு தாக்கியுள்ளார். இந்த தாக்குதலின் போது அதே பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வரும், ஆசிரியர் கீதாவின் 10 வயது மகன் பரத் முத்தப்பாவை தடுக்க முயற்சித்துள்ளான். அப்போது, கோபத்தின் உச்சத்தில் இருந்த முத்தப்பா பரத்தை ஒரு கையில் தூக்கி முதல் மாடியில் இருந்து கீழ்தளத்தில் தூக்கி எரிந்துள்ளார்.
இதில் பரத் படுகாயம் அடைந்த நிலையில் அங்கிருந்தவர்கள் காயம் அடைந்திருந்த கீதா மற்றும் பரத் ஆகியோரை கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அலைத்து சென்றார்கள். தலையில் படுகாயம் அடைந்திருந்த பரத் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். சக ஆசிரியர் மற்றும் பள்ளி மாணவனை தாக்கிய முத்தப்பா இந்த தகவல் கிடைத்தவுடன் தலைமறைவாகியுள்ளார். தலைமறைவாகி உள்ள முத்தப்பா மீது காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.