spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபிச்சை எடுக்கத் தடை…புதிய மசோதா நிறைவேற்றம்

பிச்சை எடுக்கத் தடை…புதிய மசோதா நிறைவேற்றம்

-

- Advertisement -

மிசோரமில் பிச்சை எடுப்பதை தடை செய்யும் மசோதா 2025, சட்டப்பேரவையில்  நிறைவேற்றியுள்ளது.பிச்சை எடுக்கத் தடை…புதிய மசோதா நிறைவேற்றம்பிச்சை எடுப்பதைத் தடை செய்யும் மசோதா 2025, மிசோரம் சட்டப்பேரவையல் நிறைவேற்றியுள்ளது.இதன் மூலம் அரசு, NGO இணைந்து பிச்சைகாரர்கள் இல்லாத மாநிலமாக மாற்ற அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து, மாநிலத்தில் முதற்கட்டமாக மிசோரமில் மாநில அளவிலான நிவாரண வாரியத்தை அமைக்கவும், பிச்சைக்காரர்களை தற்காலிகமாக தங்கவைக்க மறுவழ்வு மையங்களை உருவாக்கவும் முடிவு செய்துள்ளது.

இம்மையங்களில் பிச்சைகாரர்களுக்கு தங்குமிடம் மற்றும் அடிப்படை வசதிகள் வழங்கப்படுவதுடன், அவர்களுக்கு சுயதொழில் வாய்ப்புகள் மற்றும் தொழில் திறன் பயிற்சிகள் அளிக்கப்படும். இதன் மூலம் சமூகத்தில் மீண்டும் இணைந்து வாழும் வாய்ப்பு கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது.

we-r-hiring

மேலும், இந்த முயற்சியில் அரசு மற்றும் தனியார் சமூக சேவை அமைப்புகள் (NGO-கள்) இணைந்து செயல்பட உள்ளன. மிசோரத்தில் பிச்சை ஒழிப்பு நடவடிக்கை வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டால், இது மற்ற மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

காதல் என்ற பெயரில் சீரழியும் இளம் தலைமுறையினர்…சட்டவிரோத  கருகலைப்பால் சிறுமி பலி

MUST READ