- Advertisement -
பீஃப் சாப்பிட தடை விதித்த வங்கி மேலாளருக்கு பீஃப் திருவிழா நடத்தி எதிர்ப்பைக் காட்டிய வங்கி ஊழியர்கள் சங்கம்.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கனரா வங்கி வளாகக் கேண்டீனில் பீஃப் சாப்பிடவும் விற்கவும் தடை விதித்த மேலாளரின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர்கள் சங்கம் “பீஃப் திருவிழா” நடத்தி போராட்டம் மேற்கொண்டது.

பீகாரைச் சேர்ந்த மேலாளர் ஒருவர், வங்கிக்குள் பீஃப் சாப்பிடக் கூடாது என்று உத்தரவிட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர். இதற்கு எதிராக, வங்கியின் முன்பாகவே ஊழியர்கள் பரோட்டா, பீஃப் சாப்பிட்டு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இது தொடர்பாக ஊழியர் சங்கத்தினர், “உணவு என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். விரும்பிய உணவை சாப்பிட அனைவருக்கும் உரிமை உண்டு” என்று தெரிவித்தனர்.