spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமத்திய அரசின் பிரதிநிதி ஆளுநர்… மத்திய அரசுதான் அவரிடம் அதிகாரத்தை ஒப்படைத்தது – உச்ச நீதிமன்றம்...

மத்திய அரசின் பிரதிநிதி ஆளுநர்… மத்திய அரசுதான் அவரிடம் அதிகாரத்தை ஒப்படைத்தது – உச்ச நீதிமன்றம் கருத்து

-

- Advertisement -

ஆளுநர் மத்திய அரசின் பிரதிநிதி தான் அவரிடம் அதிகாரத்தை மத்திய அரசுதான் ஒப்படைத்துள்ளது என உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது.மத்திய அரசின் பிரதிநிதி ஆளுநர்… மத்திய அரசுதான் அவரிடம் அதிகாரத்தை ஒப்படைத்தது – உச்ச நீதிமன்றம் கருத்துமத்திய அரசு தரப்பு:-

அரசியல் சாசனப் பிரிவு 32 கீழ் மாநில அரசுகள் நீதிமன்றத்தை அணுக முடியாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கர்நாடகா மாநிலம் தொடர்பான ஒரு வழக்கில் தெளிவுபடுத்தி உள்ளது. ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு விட்டது, ஏன் ஒப்புதல் வழங்கப்பட்டது என்பது தொடர்பாக ஒருவர் நீதிமன்றத்தை அணுகி ஒப்புதலை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினால் ஒப்புதலை ரத்து செய்ய உத்தரவிட முடியுமா ?

we-r-hiring

தலைமை நீதிபதி:-

ஆனால் அந்த மசோதாவில் இருக்கும்  சட்ட பிரச்சனைகள், சட்ட நடைமுறை குறித்தும் நீதிமன்றத்தின் முன்பு கேள்வி எழுப்ப முடியும் அதனை ஆராய்வதற்கான உரிமையும் அதிகாரமும் உச்ச நீதிமன்றத்திற்கு உண்டு. ஆனால் இங்கு இந்த வழக்கில் கேள்வி என்னவென்றால் சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதா மீது ஆளுநர் எத்தனை காலம் முடிவெடுக்காமல் அப்படியே வைத்திருக்க முடியும்? என்பதுதான்

இதற்கு மத்திய அரசின் பதில் என்ன?

அரசியல் நிர்ணய சபை விவாதத்தில் முதலில் 6 வாரங்களில் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும்  என்று விவாதம் நடத்தப்பட்டது.

பின்னர் அது “As Soon As” என்று குறிப்பிடப்பட்டது. அதன் நோக்கம் உடனடியாக முடிவெடுக்க  வேண்டும் என்பதே ஆகும் என அரசியல் நிர்ணயசபை விவாதத்தின்போது ஒரு உறுப்பினர் தெரிவித்தார். அப்படியானால் As Soon As என்பது 6 வாரங்களுக்கு மேல்நீடிக்க கூடாது என்பதுதான் பொருளாக கொள்ள முடியும்.

அரசியல் நிர்ணயசபை உறுப்பினர்களின் முடிவையும்,  எதிர்பார்ப்பையும் நாம் புறக்கணிக்க முடியுமா? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆளுநர்கள் ஆறு மாதம், ஒரு வருடம் என்று மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருப்பதை நியாயப்படுத்த முடியாது.

மேலும் ஆளுநரிடம் பதில் கேட்பதில் தவறில்லை, ஏனெனில் ஆளுநர் மத்திய அரசை பிரதிநித்துவப்படுத்துபவர் தான், அவர் மத்திய அரசை பிரதிநிதித்துவபடுத்துபவர் இல்லை என்ற மத்திய அரசின்  வாதத்தை ஏற்க முடியாது. ஆளுநர் மத்திய அரசின் பிரதிநிதி தான் அவரிடம் அதிகாரத்தை மத்திய அரசுதான் ஒப்படைத்துள்ளது என்று கருத்து தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு இழப்பை தடுக்க தமிழக அரசு குறைந்தது ரூ.5000 மாதம் வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்…

MUST READ