- Advertisement -
ஆஸ்திரேலிய பிரதமருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸூக்கு, டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
குடியரசு தலைவர் மாளிகைக்கு வருகை தந்த ஆஸ்திரேலிய பிரதமருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கைகுலுக்கி வரவேற்றார். அதனைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை, ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ் ஏற்றுக் கொண்டார்.

பின்னர் ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை பிரதமர் நரேந்திரமோடி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது பேசிய அல்பானீஸ் , இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான நட்புறவு மேலும் வலுவாகி வருவதாக தெரிவித்தார்.
ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் மலர்தூரி மரியாதை செலுத்தினார். அப்போது, அவருக்கு காந்தியின் திருவுருவச்சிலை பரிசாக வழங்கப்பட்டது.