Homeசெய்திகள்இந்தியாபெங்களூருவில் கூடும் எதிர்க்கட்சிகள்- திட்டம் என்ன?

பெங்களூருவில் கூடும் எதிர்க்கட்சிகள்- திட்டம் என்ன?

-

 

சிறிய கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்க முனைப்புக் காட்டும் காங்கிரஸ், பா.ஜ.க.!
Photo: ANI

பெங்களூருவில் இன்று (ஜூலை 17) தொடங்கவுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்தும், குறைந்தபட்ச பொதுச்செயல் திட்டம் குறித்தும் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

‘சத்யதேவ் சட்ட அகாடமி’யைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், மத்தியில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளனர். கடந்த ஜூன் மாதம் பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை அம்மாநில முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் கூட்டினார்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 15 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இரண்டாவது இரண்டாவது கூட்டத்தை காங்கிரஸ் கட்சி பெங்களூருவில் இன்றும், நாளையும் நடத்துகிறது. இதில், தி.மு.க., காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 26 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி, முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சரத் பவார் உள்ளிட்ட தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளரை அறிவித்து களம் இறங்குவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்ச பொதுசெயல்த் திட்டத்தை வகுக்கக் குழு அமைப்பது குறித்து பேசப்படலாம் என காங்கிரஸ் கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

விழுப்புரம் சாலையில் கோரவிபத்து…4 மீனவ பெண்கள் உயிரிழப்பு… தமிழக அரசு நிதியுதவி அறிவிப்பு!

மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக நாடெங்கும் கூட்டுப் போராட்டங்கள் நடத்துவது குறித்து திட்டங்களை வகுக்கவும், குழு அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில வாரியாக தொகுதிப் பங்கீடு குறித்த தலைப்பும் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, கூட்டத்தின் முதல் நாளான இன்று (ஜூலை 17) எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா விருந்தளிக்கிறார்.

MUST READ