spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"புதிய எதிர்காலத்தின் தொடக்கம்"- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

“புதிய எதிர்காலத்தின் தொடக்கம்”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

-

- Advertisement -

 

"புதிய எதிர்காலத்தின் தொடக்கம்"- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
Photo: SANSAD TV

டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பேசி பிரதமர் நரேந்திர மோடி, “புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு இன்று இடம் பெயர்வது புதிய எதிர்காலத்திற்கான தொடக்கம். அரசியல் சாசனத்திற்கு பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் தான வடிவம் கொடுக்கப்பட்டது. பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் சுமார் 4,000 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

we-r-hiring

லெக்ராஞ்சியின் புள்ளியை நோக்கிய பயணத்தைத் தொடங்கிய ஆதித்யா- எல்1 விண்கலம்!

பழைய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு விடைக் கொடுக்கும். நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் உறுதியேற்க வேண்டும். இந்த விநாயகர் சதுர்த்தி நாளில் புதிய பயணத்தைத் தொடங்குகிறோம். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற உறுதியை நிறைவேற்றும் முனைப்புடன் புதிய கட்டடத்திற்கு செல்கிறோம். பெண்களுக்கு அதிகாரமளிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணியாற்றியுள்ளனர்.

காவிரியில் தண்ணீரைத் திறந்து விட வலியுறுத்தி தமிழக எம்.பி.க்கள் குழு கோரிக்கை மனு!

முத்தலாக் தடைச் சட்டம் உள்ளிட்ட சிறப்புமிக்க சட்டங்கள் இங்கு நிறைவேற்றப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளனர்.

MUST READ