spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபெங்களூரு ராமேஸ்வரம் கஃபே மீண்டும் திறக்கப்பட்டது..!!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே மீண்டும் திறக்கப்பட்டது..!!

-

- Advertisement -

 

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேபெங்களூரு வொயிட்ஃபீல்டு பகுதியில் குண்டு வெடிப்பினால் சேதனடைந்த ராமேஸ்வரம் கஃபே 8 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

கடந்த மார்ச் 1ம் தேதி நன்பகல் 12.55 மணிக்கு ராமேஸ்வரம் கஃபேவில் திடீரென சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் 3 ஊழியர்கள் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். குண்டு வெடிப்புக்கான காரணங்களை ஆராய்ந்தபோது, கடை வாசலில் அடையாளம் தெரியாத மர்ம நபர் விட்டுச் சென்ற பை மூலம் குண்டு வெடித்தது கண்டறியப்பட்டது.

மேலும் சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்தபோது தொப்பி அணிந்த நபர் ராமேஸ்வரம் கஃபேவுக்கு வருவதும், தோளில் சுமந்து வந்த பையை உணவகத்தில் விட்டுச்சென்றுவிட்டு, பேருந்தி ஏறிச் செல்வதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. உடனடியாக இந்த வழக்கு சி.ஐ.ஏ-வுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில் சி.சி.டி.வி காட்சியில் இருந்த அடையாளம் தெரியாத நபர் தான் குற்றவாளி என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

அவருடைய முகம் மற்றும் உருவம் உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டுள்ள சி.ஐ.ஏ போலீசார் தொடர்ந்து குற்றவாளியை தேடி வருகின்றனர். இதற்கிடையில் குண்டு வெடிப்பினால் கடுமையாக சேதமடைந்த ராமேஸ்வரம் கஃபே புணரமைக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை மீண்டும் வாடிக்கையாளர்களின் தேவைக்காக ராமேஸ்வரம் கஃபே பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து பேசிய உணவக உரிமையாளர்களில் ஒருவரான ராகேவந்திர ராவ், எதிர்காலத்தில் மீண்டும் இப்படியொரு சம்பவம் நடைபெறக் கூடாத வகையில் பாதுகாப்பு கட்டமைப்புகளை முன்னெடுத்துள்ளது. முன்னாள் ராணுவ ஊழியர்களை பாதுகாப்பு பணியாளர்களாக கஃபேவில் நியமனம் செய்துள்ளோம் என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், ராமேஸ்வரம் கஃபேவில் குண்டு வெடிப்பு தொடர்பான அனைத்து சி.சி.டி.வி காட்சிகளும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை எங்களுக்கு அரசாங்கத்தில் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி. என்.ஐ.ஏ அதிகாரிகள் விரைவில் குற்றவாளியை கைது செய்வார்கள் என்று நம்புகிறோம். அனைத்துவிதமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகு தான், கஃபேவை திறந்துள்ளோம். எங்களுடைய கஃபே வழக்கம்போல வாடிக்கையாளர்களுக்கு முழு பாதுகாப்பு அளித்து செயல்படும் என்று ராகவேந்திர ராவ் கூறினார்.

இந்த குண்டு வெடிப்புக்கு காரணமான நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள என்.ஐ.ஏ அதிகாரிகள், சம்மந்தப்பட்ட நபர் தொடர்பான விபரங்களை வெளியிடுவோருக்கு ரூ. 10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ