spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதனது முதல்வர் பதவியை பறித்த பாஜகவுடன் கைகோர்த்த குமாரசாமி

தனது முதல்வர் பதவியை பறித்த பாஜகவுடன் கைகோர்த்த குமாரசாமி

-

- Advertisement -

தனது முதல்வர் பதவியை பறித்த பாஜகவுடன் கைகோர்த்த குமாரசாமி

கர்நாடகாவில் பாஜக- மதசார்பற்ற ஜனதா தளம் இணைந்து நாடாளுமன்ற தேர்தலில் சந்திக்கிறது.

Karnataka Chief Minister HD Kumaraswamy Meets Prime Minister Narendra Modi;  Seeks Early Release Of Rs 2,064 Crore Drought Relief For Rabi Season

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகவில் பாஜக மற்றும்- குமாரசாமியின் ஜேடிஎஸ் கூட்டணி உறுதியாகி உள்ளது. மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 24 தொகுதிகளில் பாஜகவும் நான்கு தொகுதிகளில் மதசார்பற்ற ஜனதா தளமும் போட்டியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்க அமித்ஷா ஒப்புதல் அளித்துள்ளதாக கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். பிரதமருடன் கூட்டணி குறித்து தேவகவுடா ஏற்கனவே உறுதி செய்துவிட்டார் என்றும் எடியூரப்பா கூறியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு மஜத- காங்கிரஸ் கூட்டணி அரசை உடைத்து குமாரசாமியின் முதலமைச்சர் பதவியை காலி செய்து ஆட்சியை கைப்பற்றிய கட்சி பாஜக குறிப்பிடதக்கது.

MUST READ