Homeசெய்திகள்இந்தியாகாவிரி நீர் வழக்கு– உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது

காவிரி நீர் வழக்கு– உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது

-

காவிரி நீர் வழக்கு– உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது

காவிரியில் தண்ணீர திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.

காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை பெய்யாததாலும் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிடாததாலும் 5 லட்சம ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் கருகும் சூழ்நிலை இருப்பதால் காவிரியில் இருந்து வினாடிக்கு 24,000 கன அடி வீதம் நீர் திறந்து விடக் கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரியும், வினாடிக்கு 10,000 கன அடி வீதம் நீர் திறக்க உத்தரவிட்ட காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு எதிராகவும் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

காவிரி நீர் வழக்கு– உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது

அந்த மனுவில், ஜூன் மற்றும் ஜூலை மாதம் இறுதி வரை தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து திறந்து விடப்பட வேண்டி நிலுவையில் 28.8 TMC நீர், ஆகஸ்ட் மாதம் வழங்கப்பட வேண்டிய 45 TMC நீரை இந்த மாத இறுதிக்குள் திறந்து விட வேண்டும் எனவும், மேலும் செப்டம்பர் மாதம் வழங்கப்பட வேண்டிய 36.76 TMC நீரை உரிய நேரத்தில் திறந்து விடவும் கோரிக்கை வைத்துள்ளது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வில் தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்த்கி இன்று முறையீடு செய்தார்.

காவிரி நீர் வழக்கு– உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது

உச்சநீதிமன்றத்தின் நடைமுறைப்படி, முந்தைய தினம் மாலை முறையீட்டு பட்டியலில் இணைக்கப்படும் வழக்குகள் மட்டுமே, காலை நீதிமன்றத்தில் முறையீடு செய்ய அனுமதிக்கப்படும். ஆனால் தமிழ்நாடு அரசின் மனு முறையீட்டு பட்டியலில் இடம்பெறாததால், உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் முறையிட்டு விசாரணை பட்டியலில் இணைக்கவும் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்களுக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுறுத்தினார். அதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் பதிவாளரிடம் முறையிட்டார்.

தமிழ்நாடு அரசின் மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வில் திங்கட் கிழமை விசாரணைக்கு வர உள்ளது. திங்கட் கிழமை அன்று தமிழக அரசின் மனுவை விசாரிக்கும் தலைமை நீதிபதி இந்த வழக்கத தனது தலைமையிலான அமர்வே விசாரிக்குமா அல்லது வேறு அமர்வு விசாரணைக்கு உத்தரவிடுமா என்பது திங்கட் கிழமை தெரியும்.

MUST READ