spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமுன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கு சிறையில் ஏசி வசதி!

முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கு சிறையில் ஏசி வசதி!

-

- Advertisement -

 

தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய தெலுங்கு தேசம் கட்சி!
File Photo

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இன்று (அக்.15) முதல் சந்திரபாபு நாயுடுவிற்கு சிறை வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.

we-r-hiring

“மீன்பிடி உரிமையை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!

மாநில திறன் மேம்பாட்டு கழகத்தில் 300 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நிகழ்ந்த குற்றச்சாட்டில், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு, ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் உள்ள அவருக்கு அதிக வெப்பம் காரணமாக, தோலில் தடிப்புகள் ஏற்பட்டிருப்பதாக, அவரது குடும்பத்தினர் ஆதங்கம் தெரிவித்தனர். இதையடுத்து, ராஜமுந்திரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள்,சிறைக்கு சென்று பரிசோதித்ததில், அவருக்கு பாதிப்பு ஏற்பட்டது உறுதிச் செய்யப்பட்டது.

அப்துல் காலம் சிலையைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சிறையில் நிலவும் அதிகப்படியான வெப்பம் காரணமாக, இந்த பாதிப்பு ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். மருத்துவர்களின் பரிந்துரை படி, சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டுள்ள சிறை அறையில் ஏசி வசதி செய்துக் கொடுக்க விஜயவாடா லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதையடுத்து, சிறையில் சந்திரபாபு நாயுடு உள்ள அறைக்கு ஏசி வசதி செய்யப்படவிருக்கிறது.

MUST READ