Homeசெய்திகள்இந்தியாஆந்திராவில் நீடிக்கும் பதற்றம்- பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ஆந்திராவில் நீடிக்கும் பதற்றம்- பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

-

ஆந்திராவில் நீடிக்கும் பதற்றம்- பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திறன் மேம்பாட்டு கழக நிதியில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் ரூ.317 கோடி ஒப்பந்தத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் நந்தியாலா போலீசார் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை கடந்த சனிக்கிழமை கைது செய்தனர். ஊழல் வழக்கில் விஜயவாடா சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்த வாதங்களுக்கு பிறகு சந்திரபாபு நாயுடுவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, பலத்த பாதுகாப்புடன் ராஜமுந்திரி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Image

அவரது கைதை கண்டித்து, மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும்  தெலுங்கு தேசம் கட்சி சார்பில் அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், தமிழகத்திலிருந்து திருப்பதிக்கு காவல்துறை பாதுகாப்போடு பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டு, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ