நமது நாட்டின் நம்பிக்கை, கனவுகளையும் சந்திரயான் -3 தாங்கி செல்லும்: பிரதமர்
நிலவை ஆராய்ச்சி செய்யும் இந்தியாவின் 3-வது பயணமான சந்திரயான்-3-ன் முக்கியத்துவத்தை பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் விண்வெளித்துறையைப் பொறுத்தவரை 2023 ஜூலை 14-ம் தேதி எப்போதும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இருக்கும். நமது 3-வது நிலவு விண்கலமான சந்திரயான்-3 தனது பயணத்தை தொடங்கவுள்ளது. இந்த மகத்தான பயணம் நமது நாட்டின் கனவுகளையும், நம்பிக்கைகளையும் தாங்கிச்செல்லும்.
சுற்றப்பாதையை உயர்த்தும் முயற்சிகளுக்கு பின்னர் சந்திரயான்-3, நிலவின் மாற்ற பாதையில் செலுத்தப்படும். 3,00000 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து, வரும் வாரங்களில் அது நிலவை சென்றடையும். விண்கலத்தில் அறிவியல் உபகரணங்கள் நிலவின் மேல்தளத்தை ஆய்வு செய்து நமது அறிவைப் பெருக்கும்.
நமது விஞ்ஞானிகளின் முயற்சியால் விண்வெளித்துறையில் இந்தியாவுக்கு மிக வளமையான வரலாறு உள்ளது. உலகஅளவில் நிலவு பயணத்தை மேற்கொண்ட நாடுகளுக்கு இடையே சந்திரயான்-1, நிலவில் தண்ணீரின் மூலக்கூறுகள் இருப்பதை உறுதி செய்தது வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியாக கருதப்பட்டது. இது உலக முழுவதும் 200க்கும் மேற்பட்ட அறிவியல் பதிப்புகளில் வெளிவந்தது.
சந்திரயான்-1-க்கு முன்பு நிலவு ஒரு வறண்ட புவியியல் ரீதியில் செயலற்ற யாரையும் குடியமர்த்தமுடியாத, ஒரு கோளாகக் கருதப்பட்டது. இப்போது அது தண்ணீர் மற்றும் பனிப்படர்வுடன் இயங்கக்கூடிய புவியியல் ரீதியில் செயல்படக்கூடிய ஒரு கிரகமாக காணப்படுகிறது. வருங்காலத்தில் குடியமர்த்துவதற்கான வளத்தை அது கொண்டிருக்கலாம்.
சந்திரயான்-2 விண்கலமும், மிகச்சிறந்த தரவுகளை அளித்திருந்தது. நிலவின் பரப்பில் குரோமியம், மாங்கனீசு, சோடியம் ஆகியவை இருப்பதாக தொலை உணர்வு கருவி மூலம் முதன் முறையாக கண்டறியப்பட்டது. இது நிலவின் பரிமாணத்திற்குள் உள்ள உட்பொருட்களை வழங்கலாம்.
சந்திரயான்-2 தெரிவித்த முக்கிய அறிவியல் விஷயங்களில் நிலவின் சோடியம் குறித்த முதல் வரைப்படம், சந்திரயான் 2 இன் முக்கிய அறிவியல் விளைவுகளில், நிலவின் சோடியத்திற்கான முதல் உலகளாவிய வரைபடம், பரப்பின் அளவு பற்றிய அறிவை மேம்படுத்துதல், ஐஐஆர்எஸ் கருவி மூலம் நிலவின் மேற்பரப்பில் உள்ள நீர் மற்றும் பனியை தெளிவாகக் கண்டறிதல் உள்ளிட்டவை அடங்கும். இந்த விண்வெளிப் பயணம் குறித்த கட்டுரைகள், சுமார் 50 வெளியீடுகளில் இடம்பெற்றன.
14th July 2023 will always be etched in golden letters as far as India’s space sector is concerned. Chandrayaan-3, our third lunar mission, will embark on its journey. This remarkable mission will carry the hopes and dreams of our nation. pic.twitter.com/EYTcDphaES
— Narendra Modi (@narendramodi) July 14, 2023
சந்திரயான்-3ன் விண்வெளிப் பயணத்துக்கு வாழ்த்துகள். இந்த பயணம் குறித்தும், விண்வெளிப் பயணம், அறிவியல் மற்றும் புத்தாக்கத்தில் மிகப்பெரிய சாதனைகளை படைத்திருப்பது குறித்தும் நீங்கள் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும். இது உங்கள் அனைவரையும் மிகவும் பெருமையடையச் செய்யும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.