Homeசெய்திகள்இந்தியாசாக்லேட் தொழிற்சாலைக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி!

சாக்லேட் தொழிற்சாலைக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி!

-

 

சாக்லேட் தொழிற்சாலைக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி!
Photo: Rahul Gandhi

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சாக்லேட் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்ற ராகுல் காந்தி எம்.பி., அங்கு பெண் பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.

ஜி20 மாநாடு குறித்து விரிவாகப் பார்ப்போம்!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, தனது சொந்த தொகுதியான வயநாட்டிற்கு செல்லும் வழியில், நீலகிரி மாவட்டத்திற்கு சென்ற அவர், பெண்களால் நடத்தும் சாக்லேட் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்றார்.

அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி எம்.பி., சாக்லேட் தயாரிப்புக் குறித்துக் கேட்டறிந்தார். சிறுமி ஒருவரிடம் ஆட்டோ கிராஃப் வாங்கி மகிழ்ந்தார்.

புதையலில் கிடைத்த தங்க நாணயங்களை விற்று கார், ஆட்டோ வாங்கிய கும்பல் கைது

இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி எம்.பி., நாட்டின் சிறு, குறு தொழிலுக்கு இந்த சாக்லேட் தொழிற்சாலை சிறந்த உதாரணம் என புகழாரம் சூட்டியுள்ளார். அத்துடன், வீடியோவையும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ