
எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற இரண்டாவது கூட்டம், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் நேற்றும், இன்றும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தி.மு.க., காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசிய மாநாட்டு கட்சி, ம.தி.மு.க., கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, வி.சி.க., ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
அமலாக்கத்துறை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
குறிப்பாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி ஆசைப்படவில்லை. காங்கிரஸ் கட்சி அதிகாரத்திற்கு வருவதற்காக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கவில்லை. சமூக நீதி, ஜனநாயகம், அரசியலமைப்பு உள்ளிட்டவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்பதே நோக்கம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில் பிரதமர் பதவி குறித்த காங்கிரஸ் எண்ணத்தைச் சொல்லிவிட்டேன்.
எதிர்க்கட்சிகள் இடையே சில வேறுபாடுகள் உள்ளன; ஆனால் அவை கருத்தியல் சார்ந்தவை அல்ல. மக்களின் நலனுக்காகக் கருத்து வேறுபாடுகளைப் பின்தள்ளிவிட்டு ஒன்றிணைந்துள்ளோம். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. ஆகிய விசாரணை அமைப்புகளை எதிர்க்கட்சிகளைத் தாக்கும் ஆயுதமாக பா.ஜ.க. பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது பொய் குற்ற வழக்குகள் போடப்படுகின்றன.
உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல் கட்சி பாஜகதான்- டிகேஎஸ் இளங்கோவன்
எம்.எல்.ஏ.க்களை மிரட்டியும், விலைக்கு வாங்கியும் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியை பா.ஜ.க. செய்கிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.