எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற இரண்டாவது கூட்டம், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் நேற்றும், இன்றும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தி.மு.க., காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசிய மாநாட்டு கட்சி, ம.தி.மு.க., கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, வி.சி.க., ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.
மாரிசெல்வராஜின் மாமன்னன்…. ஓடிடி ரிலீஸ் தேதி அப்டேட்!
குறிப்பாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பாக்ஸ் ஆஃபிஸில் அடித்து நொறுக்கிய சிவகார்த்திகேயனின் மாவீரன்!
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்பும் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. பாட்னா கூட்டத்திற்கு முன்பும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பது அவசியம். எதிர்க்கட்சிகள் இடையே பொதுவான குறைந்தபட்ச செயல் திட்டம் அவசியம்” என வலியுறுத்தியுள்ளார்.