கர்நாடகத்தில் நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும் நிலையில், இருப்பதை அடுத்து நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. வெற்றி உறுதியாக இருப்பதை அடுத்து ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை காங்கிரஸ் தொடங்கி உள்ளது. பெங்களூருவில் உள்ள ஹில்டன் ஓட்டலில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெற்றி முகத்தில் உள்ள அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் பெங்களூரு வர காங்கிரஸ் தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கிரானைட் கொள்ளையர் மீது நடவடிக்கை எடுக்காமல் சலுகை காட்டுவதா?- அன்புமணி ராமதாஸ்
பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்களுக்கும் அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின்படி, 115 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. ஆளும் கட்சியான பாஜக 74 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி 28 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.