spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாவிபத்தில் சிக்கிய கேரள முதல்வரின் கான்வாய்!

விபத்தில் சிக்கிய கேரள முதல்வரின் கான்வாய்!

-

- Advertisement -

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் கான்வாய் வாகனம் விபத்தில் சிக்கிய நிலையில், அதிர்ஷ்டவசமாக அவர் காயங்கள் இன்றி தப்பியுள்ளார்.

உம்மன் சாண்டி மறைவு- கேரளாவில் பொது விடுமுறை அறிவிப்பு!
File Photo

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தை அடுத்த வாமனபுரம் பகுதியில் இன்று மாலை முதலமைச்சர் பினராயி விஜயன் தனது கான்வாய் வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது கான்வாய்க்கு முன்னால் ஸ்கூட்டரில் சென்ற பெண் ஒருவர் திடீரென குறுக்கே சென்றார். இதனால் அவர் மீது மோதாமல் இருப்பதற்காக கான்வாய் ஒட்டுநர் திடீரென பிரேக் போட்டார்.

we-r-hiring

இதனை சற்றும் எதிர்பார்க்காத பின்னால் வந்த 5 வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றன் பின் ஒன்றாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் முதலமைச்சர் பினராயி விஜயனின் கார் சிறிய அளவில் சேதம் அடைந்துள்ளது. எனினும் அவருக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து, முதலமைச்சர் பினராயி விஜயன் தனது வாகனத்தில் புறப்பட்டு சென்றார். முதலமைச்சரின் கான்வாய் வாகனம் விபத்தில் சிக்கிய நிகழ்வு கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

MUST READ