இந்தியாவில் வேகம் எடுத்த கொரோனா தொற்று. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 2,151 கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்தியாவில் கடந்த 152 நாட்களில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 2,151 கோவிட்-19 தொற்று பதிவாகியுள்ளன.

கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் முதல் 152 நாட்களுக்குப் பிறகு இந்தியாவின் கொரோனா தொற்று வழக்குகள் மீண்டும் 2000-ஐ தாண்டியது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சகத்தின் தரவு படி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 11,903ஐ கடந்துள்ளது என்று யூனியன் சுகாதாரம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி ஒரே நாளில் 2,208 தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
மேலும், தினசரி நேர்மறை விகிதம் 1.51 சதவீதமாக உள்ளது. கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை 0.7% இறப்புகளுடன் 5,30,848 ஆக அதிகரித்துள்ளது.
காலை 8 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, தினசரி நேர்மறை 1.51 சதவீதமாகவும், வாராந்திர நேர்மறை 1.53 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று PTI தெரிவித்துள்ளது.
மொத்த கொரோனா தொற்று வழக்குகளின் எண்ணிக்கை 4.47 கோடியாக பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் தேசிய கொரோனா தொற்று மீட்பு விகிதம் 98.78 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சக தெரிவித்துள்ளது.
மேலும், அதில் இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சகத்தின் இணையதளத்தின்படி, நாடு தழுவிய கொரோனா தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.65 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசிகள் நாட்டில் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், அரசின் அறிவுறுத்தலின் படி பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், குறிப்பாக பொது இடங்களில் மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் தனிமை படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.