பசு கோமியம் குடிப்பது நல்லதா? ஆய்வில் புது தகவல்
பசு கோமியத்தை மனிதர்கள் குடிப்பது உடல் நலத்திற்கு உகந்தது அல்ல என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், பசு கோமியத்தை மனிதர்கள் குடிப்பது உடல் நலத்திற்கு உகந்தது அல்ல. வயிற்றுப்போக்கு உட்பட பல உபாதைகளை விளைவிக்கும் 14 வகையான பாக்டீரியாக்கள் பசு மற்றும் எருமை கோமியங்களில் உள்ளது. 73 பசு மற்றும் எருமைகளின் சிறுநீர் மாதிரிகளை சோதனை செய்ததில், S Epidermidis மற்றும் E Rhapontici போன்ற பாக்டீரியாக்கள் கோமியத்தில் இருப்பது தெரியவந்தது” எனக் குறிப்பிடப்பட்டது.
கோமியத்திலிருந்து மருந்துகள் தயாரிப்பதை யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு ஊக்குவித்து வருகிறது. அம்மாநிலத்தின் ஆயுர்வேதத் துறை, சமீபத்தில் கோமியத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட எட்டு மருந்துகளை அறிமுகம் செய்து இருப்பது குறிப்பிடதக்கது.