Homeசெய்திகள்இந்தியாபிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி மீது ஆனி ராஜா விமர்சனம்!

பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி மீது ஆனி ராஜா விமர்சனம்!

-

 

பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி மீது ஆனி ராஜா விமர்சனம்!

வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஆனி ராஜா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தியைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆவடி, அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த வேட்பாளர் ஆனி ராஜா, “நாட்டில் அதிக ஊழல் செய்த பிரதமராக நரேந்திர மோடி உள்ளார். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராகுல் காந்திக்கு குறுகிய அரசியல் பார்வை உள்ளது. சங்க் பரிவார், பாசிசத்தை உறுதியாக எதிர்க்காமல் அரசியல் செய்வது ராகுல் காந்திக்கு நல்லதல்ல. பா.ஜ.க.வைக் கடுமையாக எதிர்க்க வேண்டிய இடத்தில் இடதுசாரி கட்சிகள் இருக்கின்றன.

ஆவடி அருகே மாவட்ட அளவிலான பூப்பந்து விளையாட்டு போட்டி!

வாக்காளர்களை நேரில் சந்தித்து தொகுதி பிரச்சனைகளை கேட்டறிந்து வருகிறேன். தொகுதி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது; வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ