spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிஆவடி அருகே மாவட்ட அளவிலான பூப்பந்து விளையாட்டு போட்டி!

ஆவடி அருகே மாவட்ட அளவிலான பூப்பந்து விளையாட்டு போட்டி!

-

- Advertisement -

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே மாவட்ட அளவிளான பூப்பந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

we-r-hiring

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் அமைந்துள்ள தனியார் உள் விளையாட்டு அரங்கில், திருவள்ளூர் மாவட்ட மலையாள கூட்டமைப்பு சங்கம் சார்பாக பூப்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது.
இந்த விளையாட்டில் ஆண்கள் 40 அணியாகவும் பெண்கள் 12 அணியாகவும் கலந்துகொண்டு அணல் பறக்க விளையாடினர். இந்த விளையாட்டு போட்டியில் OCF.HVF.ICF. உள்ளிட்ட மத்திய அரசில் பணிபுரியக்கூடிய மலையாள ஊழியர்கள் அவர்களின் பிள்ளைகள் உள்ளிட்டோர் அம்பத்தூர் ஆவடி வேப்பம்பட்டு பூந்தமல்லி, பெரம்பூர், திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் உள்ள பல பகுதிகளில் இருந்து கலந்து கொண்டனர்.

இப்போட்டிக்கு சிறப்பு விருந்தினராக தம்பிரான் நிறுவனத்தலைவர் விஜயகுமார்,மற்றும் திருவள்ளூர் மாவட்ட மலையாள கூட்டமைப்பு தலைவர் ஹைடெக் மனோகர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு முதல் பரிசாக ஒரு லட்ச ரூபாயும், இரண்டாவது பரிசாக 50 ஆயிரம் ரூபாயும் மூன்றாவது பரிசாக 25 ஆயிரம் ரூபாயும் வழங்கினர். மேலும் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளும் வழங்கப்பட்டன.

 

MUST READ