
தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் உள்நாட்டு தயாரிப்புப் பொருட்களையே வாங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
தேயிலைத் தோட்டக் கழக தொழிலாளர்களுக்கு 20% போனஸ் அறிவிப்பு!
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் உள்நாட்டு தயாரிப்புப் பொருட்களையே வாங்க வேண்டும் என்றும், அவ்வாறு வாங்கி அதை செல்ஃபி புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும் என்றும், நமோ செயலில் கூட விவரங்களை பதிவிடலாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்களுக்கு 20% போனஸ்!
உள்நாட்டு தயாரிப்புப் பொருட்களையே வாங்க உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும் என்றும், இது ஒரு இயக்கமாக மாற வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். அதேபோல், பொதுமக்கள் சுற்றுலா, யாத்திரை செல்லும் போது கூட, உள்ளூர் தொழிலாளர்கள் தயாரித்த பொருட்களையே வாங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.